மேசைக்கணனி, மடிக் கணனி, பட்டிகைக்கணனி, கைக்கணனி என்று பலதரப்பட்ட கணனிகள் இருக்கையிலேயே சீனாவின் கணனி தயாரிப்பு நிறுவனமான Lenovo மேசையாக மாற்றக் கூடிய ஒரு கணனியை உருவாக்கியுள்ளது. பாரிய ஐ-பாட் போல் செயற்படக்கூடியது இந்தக் கணனி.
IdeaCentre Horizon Table PC எனப்படும் சீனக் கணனி நாலு பேர் ஒரேயடியாகப் பாவிக்கக் கூடியது. இது கணனிகள் பிரித்த குடும்பத்தை மீளவும் இணைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பெரிய தொடு திரையை இந்த Coffee Table computer கொண்டிருக்கிறது. நான்கு பேர் ஒன்றாக இருந்து இதில் கணனி விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் இதை interpersonal computer என்று அழைக்கிறார்கள். IdeaCentre Horizon Table PC எனப்படுக் இக் கணனி 27அங்குல(67செமீ) திரையைக் கொண்டது. ஐ-பாட்டிலும் பார்க்க எட்டு மடங்கு பெரியது.
விண்டோ - 8 இல் இயங்கும் இந்த IdeaCentre Horizon Table PC இரண்டு மணித்தியாலங்கள் செயற்படக் கூடிய பட்டரியைக் கொண்டது. இதன் விலை 1700 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் Lenovo நிறுவனம் ஐபிஎம்மின் PC பிரிவை விலைக்கு வாங்கி கணனிகளைத் தயாரித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment