Saturday, 1 December 2012

சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு கை கொடுக்குமா Speak2Tweet?

பதினெட்டாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏழு இலட்சட்திற்கு மேற்பட்ட அகதிகள் என்று சிரிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிரிய ஆட்சியாளர்கள் அவ்வப்போது தமது நாட்டில் இணையத் தொடர்புகளை நிறுத்தி விடுவார்கள். 29-11-2012 வியாழக்கிழமையில் இருந்து சிரியாவில் தொலைதொடர்புகளும் இணையத் தொடர்புகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டு விட்டன.

சிறுபான்மை ஆட்சி
சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே.  கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்க்குழுமம் கிரித்தவர்களும் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலக அனுமதிதால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும்  கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. இதனால் பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நல்ல மக்களாட்சி சிரியாவில் நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழும்பிஉள்ளது.

பலமடையும் கிளர்ச்சிக்காரர்கள்
பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடையே ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பல கூறுகள் உள்ளன. மதவாதக் குழுக்களுக்கும் சிரிய சுந்தந்திரப்படையினருக்கும் இடையில் முரண்பாடுகள் நிறைய உண்டு. தொடக்கதில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவத் தயங்கி வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தற்போது சில உதவிகளைச் செய்து வருகின்றன.  13-11-2012இலன்று பிரான்ஸ் அரசு சிரியக் சிரியப் புரட்சியாளர்களின் கூட்டமைப்பு எனப்படும் கிளர்ச்சிக்காரர்களின் கூட்டமைப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது. பிரான்ஸின் அறிவிப்பு அண்மைக்காலங்களாக சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அமைப்பு ரீதியாகவும் படைவலிமை ரீதியாகவும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து செய்யப்பட்டது. கிளர்ச்சிக்காரர்கள் அடித்து விட்டு ஓடும் நிலையில் இருந்து முன்னேறி சிரியப்படைகளிடமிருந்து தமது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசங்களை நேரடி மோதல் மூலம் பாதுகாக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளனர்.

தேவை விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
18-11-2012இலன்று அலேப்பேயில் இருந்த சிரியப் படையில் 46வது படையணியை கிளர்ச்சிக்காரர்கள் தாக்கி அழித்தமை அவர்கள் மீது மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலைப் பற்றி படைத்துறை நிபுணர் எலியல் ஹன்னா  "tactical turning point that may lead to a strategic shift". கேந்திரோபாய மாற்றத்திற்கு வழிவகுக்கும் உத்திரீதியான திருப்பு முனை என்றார். இதில் பெருமளவு கனரகப் படைக்கலனகளையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து மார்ஜ் அல் சுல்த்தான் விமனத் தளத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். கிளர்ச்சிக்காரர்களின் அவசிய தேவை விமான எதிர்ப்பு ஏவுகணைகளாகும். ஆனால் இவை இசுலாமியத் தீவிரவாதிகளின் கைகளில் போய்ச் சேரும் என்ற அச்சத்தில் மேற்கு நாடுகள் இருக்கின்றன.

பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்கள்
சிரியப்படையினர் இணையத்தள தொடர்பாடல் மற்றும் பல தொடர்பாடல்களை மூடிவிட்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை  பொது மக்களின் உயிரிழப்புக்களைப்பற்றிக் கரிசனை ஏதும் இல்லாமல் செய்வது வழக்கம் என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. சிரியப்படைகள் வசம் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் குண்டுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் சிரியா இணையத் தளத் தொடர்பாடல்களை மூடியததைத் தொடர்ந்து பல சிரிய அரச இணையத் தளங்கள் இனம் தெரியாதோரால் ஊடுருவப்பட்டு மூடக்கப்பட்டுவிட்டன. இதனால் சிரியாவின் பல வெளிநாட்டுத் தூதுவரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உதவிக்கு டுவிட்டரும் கூகிளும்
சிரியர்கள் தாம் தெரிவிக்க விரும்பியவற்றை தொலை பேசிமூலம் கூகிளிற்கு அல்லது டுவிட்டருக்கு சொன்னால் அவை இணையத்தளங்களிலும் டுவிட்டரிலும் பதியக்கூடிய வசதிகளைச் கூகிளும் டுவிட்டரும் செய்துள்ளன.  Speak2Tweet என்னும் இந்த முறைமையை கூகிள் ஆரம்பித்துள்ளது. எகிப்தில் ஹஸ்னி முபராக்கிற்கு எதிரான கிளர்ச்சியின் போது இணையத் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டமையைத் தொடர்ந்து கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்தது. வீடுகளில் இருந்து இணையத்தில் பலான படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து தெருவில் இறங்கினர் என நகச்சுவையாக சொன்னார்கள்.
அமெரிக்கா உருவாக்கிய கிளர்ச்சிக்காரர்களுக்கான இணையம்
அமெரிக்க உதவி
ஏற்கனவே தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் போது ஆட்சியாளர்கள் இணையத் தொடர்பாடல்களைத் துண்டித்தால் மாற்று முறைமையை அமெரிக்க உளவுத் துறை உருவாக்கியுள்ளது. கைப்பேசிகளையும் மடிக்கணனிகளையும் கொண்ட முறைமை இது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு பல தொடர்பாடல் கருவிகளை ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே வழங்கியுள்ளன. இணையத் தளத் தொடர்பாடல்கள் மூடப்பட்டுவிடும் என்று ஏற்கனவே அறிந்திருந்த அமெரிக்கா இரண்டாயிரம் செய்மதித் தொடர்பு முறைமைகளை ஏற்கனவே சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியிருந்தது. இது ஒரு மடிக்கணனியையும் சிறு செய்மதித் தொடர்புக்கருவியும் ஐம்பது மீட்டர் நீள இணைப்பையும் கொண்டது. ஆனால் இவற்றின் மூலம் நீண்ட நேரம் ஸ்கைப்பில் உரையாட முடியவில்லை என சிரியக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான பெண் கூறியுள்ளார். (பெண்களுக்குப் போதாது தானே). இவை மூலம் கிளர்ச்சிக்காரர்கள் தங்களுக்குள் தொடர்பாடல்களை ஏற்படுத்தலாம். சிரியப் படைக்களின் நகர்வுகள் தொடர்ப்பாக பொது மக்களை எச்சரிக்கலாம் என அமெரிக்கா கருதிகிறது. ஆனால் 100MB அளவு போதாமல் இருக்கிறதாம்.

Friday, 30 November 2012

ஐநாவில் பலஸ்தீனம்: தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29/11/2012 வியாழன் (நியூயோர்க் நகர நேரப்படி) மாலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்து ஆர்பரித்தனர்.

வாக்களிப்பில் பங்கெடுக்காத நாடுகள்- 41:
Albania,      Andorra,      Australia,      Bahamas,         Barbados,                   Bosnia/Herzegovina,    Bulgaria,    Cameroon,    Colombia,   Croatia,             Dem. Rep. of Congo, Estonia,                       Fiji,            Germany,      Guatemala,  Haiti,                 Hungary,                    Latvia,                Lithuania,  Malawi,         Monaco,      Mongolia,          Montenegro,              Netherlands,             Papua New Guinea,         Paraguay,    Poland,              Korea,                         Moldova,           Romania,   Rwanda,        Samoa,        San Marino,       Singapore,                  Slovakia, Slovenia, Macedonia, Togo,           Tonga,         United Kingdom, Vanuatu. 

எதிர்த்து வாக்களித்த நாடுகள்: 9
Canada,       Czech Republic,        Israel,       Marshall Islands,        Micronesia,      Nauru,     Palau, Panama,       United States
மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலை ஒரு தனி நாடாக்கியது. அப்பிராந்தியம் அதற்கு முன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியா தனது ஆணையை 18/02/947இலன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.

28/11/2012 வரை  ஐநாவில் ஒரு தனியுரு (entity)வாகக் கருதப்பட்ட பலஸ்த்தீனம் 29/11/12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும். இனி ஐநா பொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்து கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநா பொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.

பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற எல்லாத் தகுதிகளும் அதற்கு உண்டு. ஆனால் 2011இல் ஐநா பாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமை பெறக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது. ஐநா சாசனத்தின் 4(2)இன்படி ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 2011இல் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக பலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது.

உறுப்புரிமையற்ற நாட்டின் உரிமைகள்
ஏற்கனவே 132நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக தனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்ற ஒரு நாடால் ஐநாவின் மற்ற அமைப்புக்களில் உறுப்புரிமை கோர முடியும். முக்கியமாக பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு, கடற்சட்ட ஒப்பந்த அமைப்பு, பன்னாட்டு நீதி மன்றம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் உறுப்புரிமை கோர முடியும் [ the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ), and International Criminal Court (ICC) ]ஆகிய பன்னாட்டு அமைப்புக்களில் உறுப்புரிமை பெற முடியும். நீர்வளம், கடல், வானம் ஆகியவற்றில் உரிமை கொண்டாட முடியும். ஆனால் ஐநாவைப் பொறுத்தவரை பலஸ்த்தீனம் ஒரு இறைமை உள்ள நாடு அல்ல. 29/11/2012இலன்று ஐநாவி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலஸ்தீனர்களின் நாளாந்த அவல வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவர மாட்டாது.

மிரட்டும் அமெரிக்கா
பலஸ்த்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா தனது பலஸ்த்தீனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியது. இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் இனக்கொலைகள் தொடர்ப்பாக் பலஸ்தீனம் பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றம் சென்றால் தனது பதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலும் பலஸ்த்தீனத்தை மிரட்டியது. ஆனால் ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்த்தீனத் தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்து போயுள்ள இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தையை மீளாரம்பிக்க தான் தயார் என அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆத்திரம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பிராந்தியத்தின் மீதான பன்னாட்டுச் சட்டப்படியான ஆதிக்கத்தை ஐநாவின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்காது. ஐநா பொதுச் சபையில் பலஸ்த்தீன ஆணையத் (Palestine Authority) தலைவர் மொஹ்மூட் அபாஸ் உரையாற்றும் போது இஸ்ரேலைக் கடுமையாகச் சாடி இருந்தார். ஆனால் அவர் பன்னாட்டு நீதிமன்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. அபாஸின் உரை ஒரு சமாதான விரும்பியின் உரை அல்ல என இஸ்ரேலியம் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாஹு தெரிவித்தார். பலஸ்த்தின வெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் தொடர்ந்தும் சட்ட விரோதக் குடியேற்றங்களை மேற்குக் கரையில் செய்தால் தாம் பன்னாட்டு நீதிமன்றம் போக வேண்டி வரும் என்றார். ஆனால் இஸ்ரேல் தான் மேற்குக் கரையோரத்தில் யூதக் குடியேற்றங்களைத் தொடரப் போவதாகவும் அறிவித்தது.

தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை:

பரவலான ஆதரவு மட்டும் போதாது. பலமான ஆதரவும் வேண்டும். பலஸ்த்தீனியர்களுக்கு உலகெங்கும் பரவலான ஆதரவு உண்டு இருந்தும் அதனால் ஐநாவில் ஒரு தனியான நாடாக அங்கீகாரம் பெற முடியவில்லை. அமெரிக்கா போன்ற பலமான நாடுகள் பலஸ்த்தீனத்திற்கு எதிராக நிற்பதுதான் காரணம். எமக்கு ஆதரவான நாடுகள் என்ற வகையில் நாம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். போக வேண்டிய தூரம் மிக மிக நீண்டது.

அமெரிக்க மாமாவை நம்பாதே
அமெரிக்கா பலஸ்த்தீனர்களுக்கு சொல்வதையே தமிழர்களுக்கும் சொல்கிறது. நேரடிப் பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.

பொருளாதாரத்திற்கு எதிரிகளில் தங்கியிருக்கக் கூடாது.
பலஸ்த்தீன ஆணையம் 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்த்தீன ஆணையம் தனது வருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கிறது. இதனால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் பலஸ்த்தீன மக்கள் உள்ளனர்.

உள்ளகப் பிளவுடனும் முன்னோக்கி நகரலாம்
2007இல் பலஸ்த்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காசா நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பல சிறு கூறுகளாக இஸ்ரேலால் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையோரத்தில் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சில பிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுத முனையில் மோதிக் கொண்டிருக்க பலஸ்த்தீன விடுதலை இயக்கம் பேச்சு வார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்கிறது

ஐரோப்பாவை மாற்றலாம்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்த்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. முறையான பிரச்சாரம் இதற்கு உதவியுள்ளது. பலஸ்த்தீனியப் பிரச்சனை ஊடகங்கள் முதல் கொண்டு பல்கலைக் கழகங்கள் வரை ஆய்வு செய்யப்படுகின்றன. பாடசாலைகளும் பலஸ்த்தீனப் பிரச்சனை ஆய்வு செய்யப்படுகின்றது. இதனால் பலஸ்த்தீனியர்களின் போராட்டத்தின் நியாயமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பிய நாடுகளில் நன்கு உணரப்பட்டுள்ளன்.

பொருளாதார பலம்
ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகள் மத்திய கிழக்கில் தமது வர்த்தகத்தை விரிவு படுத்த விருப்பம் கொண்டுள்ளன. பலஸ்த்தீனத்திற்கு எதிரான நிலைப்பாடு இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே பலஸ்தீனத்தை ஐநாவில் ஆதரித்தன.  உலகெங்கும் வாழ் தமிழர்கள் பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்து திரள வேண்டும். ஏற்கனவே அரபு நாடுகளுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்ட பிரித்தானியா தனது வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே நடுநிலை வகித்தது. பலஸ்த்தீனத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜேர்மனி நடுநிலைவகித்ததும் வர்த்தக நலன்கள் சார்ந்தே.

புலம் பெயர்ந்தோர் பலம் நிறைந்தோர்
அரபு நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்த விரும்பும் பிரான்ஸ் லிபியா, சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சனையில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக நல்ல உறவையும் பிரான்ஸ் பேணிவருகிறது. ஆனால் தற்போது பிரான்ஸில் ஆட்சியில் இருப்பவர்கள் அங்கு வாழ் இசுலாமியர்களின் வாக்கு வங்கியில் பெரிதும் தங்கியிருக்கின்றனர். பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு அங்கு வாழும் இசுலாமியர்களே முக்கிய காரணம்.

வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்க வேண்டும்
இலங்கையின் வடக்குக் கிழக்கை சிங்களப்படைகள் மீட்கப்பட்ட பிரதேசம் என்கின்றன. அது தமிழர்களின் பாரம்பரியத் தாயக பூமி  அது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமிழர்கள் முதலில் இழந்தனர். 1980களின் பின்னர் அதில் பெரும் பகுதியை தமிழர்கள் தமது படைக்கலலேந்திய போராட்டத்தின் மூலம் மீட்டனர். தற்போது தமிழர் தாயகம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது என்ற உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.

ஆட்சி மாறலாம் காட்சி மாறாது
ஜேர்ஜ் புஷ்ஷின் ஆட்சி போய் பாராக் ஒபாமாவின் ஆட்சி வந்தது மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் இல்லை. இதே போல் இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி போய் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என்கின்றனர் சிலர். ஆனால் தற்போது பெரிய நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றில் ஆட்சிகள் மாறும் போது மாறாமல் இருக்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு மோசமான நிலை ஏற்படலாம் என்பதை சுஸ்மா சுவராஜ்ஜிற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உருவாகிய உறவு உணர்த்துகிறது.

Thursday, 29 November 2012

ஐநாவில் பலஸ்த்தீனம் - மீண்டும் அமெரிக்கா பழிவாங்குமா?

கடந்த பல ஆண்டுகளாக பல துன்பங்களை அனுபவித்து வரும் பலஸ்த்தீன தேசம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெறுமா என்பது பற்றி 29/11/2012 வியாழக்கிழமை முடிவு செய்யப்படும். 2011இல் ஐநாவின் முழு உறுப்பினர் உரிமையைப் பெற பலஸ்தீனம் முயற்ச்சி செய்து ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் தோல்வி கண்டது. 2011இல் 1967இல் இருந்த எல்லை அடிப்படையில் தனது கோரிக்கையை பலஸ்தீனம் முன்வைத்திருந்தது. ஆனால் பாதுகாப்புச் சபையில் ஒருமித்த கருத்து இல்லாததால் பலஸ்தீனத்திற்கு வெறும் பார்வையாளர் நிலை மட்டும் வழங்கப்பட்டது. ஒரு முழு உறுப்புரிமை பெறும் அத்தனை தகுதிகளும் பலஸ்த்தீனத்திற்கு இருக்கிறது. தடையாக இருப்பது ஐக்கிய அமெரிக்கா.

பரவலான ஆதரவு
கசா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இணைத்த ஒரு நாடு தமக்குத் தேவை என பலஸ்தீன மக்கள் கோருகின்றனர். இந்த நிலப்பரப்பில் தமது இறைமையை அங்கீகரிக்கும் படி அவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு நாட்டையும் கோருகின்றனர். ஐநா மன்றில் உறுப்புரிமையுள்ள 193 நாடுகளில் 132 நாடுகள் பலஸ்தீனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனுடன் ராசதந்திர உறவையும் ஏற்படுத்தியுள்ளன.

குறைத்த கோரிக்கை
2011இல் வைத்த கோரிக்கையை கைவிட்ட பலஸ்தீனம் இப்போது உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை (non-member observer state). தற்போது உள்ள வெறும் பார்வையாளர் நிலை பலஸ்தீனப் பிரதிநிது ஐநா சபை விவாதங்களில் கலந்து உரையாற்ற முடியாது. இப்போது விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை பலஸ்த்தீனம் கோருகிறது. ஆனாலும் ஐநா பொதுச்சபையில் வாக்களிக்கும் உரிமையோ அல்லது பாதுகாப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்படும் உரிமையோ பலஸ்த்தீனம் கோரவில்லை. அப்படிப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படும் என்பதை பலஸ்தீனம் உணர்ந்துள்ளது. பலஸ்தீனம் பன்னாட்டு நீதிமன்றில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாமா என்பது கேள்விக்குறி.

யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம்
2011 அக்டோபர் மாதம் யுனெஸ்கோவில் பலஸ்த்தீனம் ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பு மத்தியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. ஆத்திரமடைந்த ஐக்கிய அமெரிக்கா யுனெஸ்க்கோவிற்கான தனது நிதியுதவியை குறைத்தது. அப்போது வாக்களித்த 173 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 14 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. 

1993 ஒஸ்லோ உடன்படிக்கை
பலஸ்த்தீன அதிகாரசபையே ஐநாவில் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைக் கோருகிறது. 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பலஸ்த்தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் பலஸ்தீன சமாதானப் பேச்சு வார்த்தை இஸ்ரேல் மேற்குக் கரையில் யூதர்களைக் குடியேற்றுவதால் முறிவடைந்து விட்டது. 29/11/2012இல் ஐநா வாக்களிப்பைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடலாம என பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் மொஹ்மூட் அபாஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸும் பலஸ்தீன விடுதலை இயக்கமும்
பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை வழங்கப்பட்டால் அது சமாதானப் பேச்சு வார்த்தையைக் குழப்பும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரிக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் காசா நிலப்பரப்பில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் எனக் கருதுகின்றன. ஏற்கனவே ஹமாஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் மொஹ்மூட் அபாஸ் செல்வாக்குக் குறைந்த நிலையிலேயே இருக்கிறார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பலஸ்த்தீனம் இஸ்ரேலுடனான நேரடிப் பேச்சுவார்த்தையால் மட்டுமே தனது உரிமைகளை நிலை நாட்ட முடியும் ஐநா மன்றில் அல்ல என்கின்றன.

பன்னாட்டு நீதி
பலஸ்த்தீனர்களைப் பொறுத்தவரை பன்னாட்டு நீதி என்பதி நீண்டகாலமாகப் பிழையாகவே இருக்கிறது. பிரித்தானியா பலஸ்த்தீனம் ஐநா உறுப்புரிமை பெறுவதை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதிக்கிறது. உறுப்புரிமை பெற்ற பலஸ்த்தீனம் இஸ்ரேலை பன்னாட்டு நீதிமன்றிற்கு இழுக்கக் கூடாது என்பதே. பலஸ்த்தீனியர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்கு நீதி இல்லையா? உறுப்புரிமைக்காக வழக்குத் தொடுக்கும் உரிமையைக் கைவிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வெற்றி பெறும் தீர்மானம்.
 அமெரிக்காவிற்கு அஞ்சி பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையை மட்டுமே கோருகிறது.  உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைப் பெற்றால் the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ), and International Criminal Court (ICC) ஆகிய அமைப்புக்களில் பலஸ்த்தீனத்தால் உறுப்புரிமை பெறமுடியும். அத்துடன் தனது நிலப்பரப்பிலும் வான்பரப்பிலும் பல உரிமைகள் அதற்குக் கிடைக்கும். பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் உறுப்புரிமை பெறுவதை எதிக்கவில்லை. ஆனால் தீர்மானத்தின் நகல் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நகலைப் பொறுத்து சில நாடுகள் மாறலாம். பிரான்ஸ் தான் பலஸ்த்தீன உறுப்புரிமையை ஆதரிப்பதாக சைகைகாட்டியுள்ளது. சுவிஸ், டென்மார்க், நோர்வே, ஒஸ்ரியா ஆகிய நாடுகள் பலஸ்த்தீனத்தை ஆதரிக்கின்றன. நெதர்லாந்து வாக்களிக்க மாட்டது. கனடா பலஸ்த்தீனத்திற்கு எதிராக வாக்களிக்கும்.ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தமது கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஜேர்மனை எதிர்க்கும் என்று இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. ரம்மல்லா நகர்வாழ் பலஸ்த்தீனியர்களில் பலர் பன்னாட்டு நீதி மன்றின் உறுப்புரிமையை விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. அந்த உரிமை எதிர்காலத்தில் இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளில் நல்ல துருப்புச் சீட்டாக அமையும் என அவர்கள் கருதுகின்றனர். சிலர் பன்னாட்டு நிதிமன்றில் உறுப்புரிமை கோருதலோ அல்லது அதில் இஸ்ரேலை வழக்கிற்கு இழுக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை தற்போது வாய்மொழி மூலம் மட்டும் கொடுக்கலாம் எனக் கருதுகின்றனர். பிரித்தானியாவின் நிபந்தனையான பன்னாட்டு நீதி மன்ற உறுப்புரிமையை பலஸ்த்தீனம் கோரக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. பலஸ்த்தீன உறுப்புரிமை கோரலை பிரித்தானியா எதிர்த்தால் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கையும் வர்த்தகத்தையும் இழக்க வேண்டி வரலாம்.

மீண்டும் பழிவாங்குமா அமெரிக்கா
29/11/2012 வியாழக்கிழமை ஐநா பொதுச் சபையில் பலஸ்த்தீனம் ஒரு உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைப் பெற்றால் ஐக்கிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைக்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா இரகசியமாக உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலைக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளது. பலஸ்த்தீனத்தின் மீது ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரலாம். இஸ்ரேல் மஹ்மூட் அபாஸைப் அவரது பதவியில் இருந்து தூக்கும் சதியை மேற்கொள்ளலாம். தற்போது பலஸ்த்தீனியத் தொழிலாளர்கள் கொடுக்கும் வரியில் ஒருபகுதியை இஸ்ரேல் பலஸ்தீன அதிகாரசபைக்கு வழங்கி வருகிறது. இஸ்ரேல் அதை நிறுத்தலாம்.

Wednesday, 28 November 2012

வருகிறது விமானி இல்லா பயணிகள் விமானம்

ஆளில்லா போர் விமானங்கள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் விமானத்திலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஆம் நாம் விமான ஓட்டி இல்லாத விமானங்களில் பயணம் செய்யப் போகிறோம்.

இரட்டை இயந்திரம் கொண்ட  பயணிகள் தாரை விமானம் ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது. இது தரையில் இருந்து ரிமோட் கொன்ரூல் (Remote Control) மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு விமான நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் முதலில் பறக்க விடும் விமானம் Jetstream 41எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது விமானிகள் ஓட்டும் பல விமானங்களில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. விமானங்கள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன.

ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு விமானங்களில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் விமானியில்லா விமானங்கள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது.

விமானிகள் இல்லாத விமானங்களை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு விமானிகள் இல்லாத விமானங்கள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 26 November 2012

விஞ்ஞானிகள்: இறப்பு என்று ஒன்றில்லை.

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி  விழிப்பது போலும் பிறப்பு" என்பது வள்ளுவன் வாய் மொழி. இதில் வள்ளுவன் இறப்பு என்று ஒன்றில்லை. உயிரின் ஒரு தொடர்ச்சி நிலையிலேயே இருக்கும் என்று பொருள்படச் சொல்கிறான். அதை விஞ்ஞானிகள் உண்மை என்று சொல்கின்றனர். இறப்பு என்று ஒன்று இல்லை என்கின்றனர். 

Biocentrism என்னும் புதிய  கோட்பாடு நான் யார் என்ற கேள்விக்குக் கூறும் விடை: You are just a 20-watt fountain of energy operating in the brain. நீ என்பது உனது மூளைக்குள் இருக்கும் 20 வாட்(watt) ஆற்றல்(சக்தி). இந்த ஆற்றல் தான் உயிர் ஆகும். விஞ்ஞானக் கோட்பாட்டின் படி ஆற்றலை(சக்தியை) ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எனவே எமது மூளைக்குள் இருக்கும் இந்த 20 வாட் ஆற்றலான எமது உயிரையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. மேலும்  விஞ்ஞானம் ஆற்றலை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவமாக மாற்றலாம் என்கிறது.

விஞ்ஞானத் தத்துவங்களின் படி சில அவதானிப்புக்களை முழுமையாக எதிர்வு கூற முடியாது ஆனால் பல அவதானிப்புக்களின் எதிர்வு கூறல்கள் பதரப்பட்டதாக வேறு வேறு சாத்தியப்பாடுகளுடன் இருக்கும். உயிர் நிலையானது என்பதற்கான விளக்கத்திற்கு எண்ணிலா பிரபஞ்சங்கள் இருக்கின்றன (‘multiverse’). அதனால் இடமும் காலமும் (space and time)  முடிவற்றவை. காலம் முடிவற்றது என்று இருக்கும் போது உயிரும் முடிய்வற்றதே. உயிர் ஒரு பிரபஞ்சத்தில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்குப் போகும்.

Biocentrism கோட்பாட்டின் படி இடமும் காலமும் (space and time) கடினமான பொருட்களல்ல.

According to Biocentrism, space and time are not the hard objects we think. Wave your hand through the air - if you take everything away, what's left? Nothing. The same thing applies for time. You can't see anything through the bone that surrounds your brain. Everything you see and experience right now is a whirl of information occurring in your mind. Space and time are simply the tools for putting everything together.

இறப்பு என்று ஒன்று இல்லை என ஐன்ஸ்டைன் தனது நண்பரின் இறப்பின் போது இப்படிக் குறிப்பிட்டார்:
Death does not exist in a timeless, spaceless world. In the end, even Einstein admitted, "Now Besso" (an old friend) "has departed from this strange world a little ahead of me. That means nothing. People like us...know that the distinction between past, present, and future is only a stubbornly persistent illusion." Immortality doesn't mean a perpetual existence in time without end, but rather resides outside of time altogether.  இறப்பு என்பது காலத்திற்கும் இடத்திற்கும் வெளியே செல்வது என்று கொள்ளலாம்.

முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் இறக்கவில்லை. எம்முடன் இருக்கிறார்கள்

படைத்துறைப் போட்டியில் இஸ்ரேலின் அடுத்த அடி

படைத்துறைப் போட்டி என்பது உலகெங்கும் கட்டற்ற நிலையில் தொடர்கின்றது. புதிய விதமான படைக்கலன்களை பெரும் பணச் செலவில் உருவாக்குவதில் பல நாடுகள் போட்டியிடுகின்றன. இதில் பெரிய நாடு சிறிய நாடு, பணக்கார நாடு வறிய நாடு என்ற பேதம் இல்லாமல் போட்டி நடக்கின்றது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற விடுதலை இயக்கங்களும் தமது படைக்கலன்களை காலத்திற்கு ஏற்ப புதியனவாக மாற்றுகின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஈராக் மீது தாக்குதல் நடாத்திய போது அப்போதைய ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேயின் இஸ்ரேலை நோக்கி தனது ஸ்கட் ஏவுகணைகளை வீசினார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா பேட்ரியட் என்னும் ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை வழங்கியது. ஆனாலும் 39 ஸ்கட் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியது.

இரும்புக் கூரை
இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome) என்னும் எறிகணை மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியழிக்கும் முறைமையை உருவாக்கியிருந்தது. 2012 நவம்பர் மாத நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில் இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது. இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் வெளியில் வைத்து அழித்தது. இந்த இரும்புக் கூரை முறைமை இஸ்ரேலிய அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்பாகும். இரும்புக் கூரை முறைமை குறுந்தூர ஏவுகணைகளையும் எறிகணைகளையும் அழிக்க வல்லன. இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது. சில படைத் துறை வல்லுனர்கள் இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது இரும்புக் கூரை 90% வெற்றி என்கிறது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை.

ஈரானியத் தொலைக்காட்சியான பிரெஸ் ரீவி இரும்புக் கூரை தோல்வியைக் கண்டுள்ளது என்கிறது:


மந்திரக் கோல்
இப்போது இஸ்ரேல் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David's Sling என்னும் நீண்ட தூர ஏவுகணைகளை இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.  டேவிக் கோலியாத் கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான Rafael Advanced Defense Systems மும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம் இணைந்து David's Slingஐ உருவாக்கியுள்ளது. மதிரக்கோல் எனப்படும் David's Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலை நோக்கி 200,000 ஏவுகணைகள்
2012 நவம்பர் 25-ம் திகதி இஸ்ரேல் சோதனை செய்து பார்த்த David's Sling இடைமறிப்பு ஏவுகணைகள் முன்னூறு கிலோ மீட்டர்கள் பாயக்கூடிய ஏவுகணைகளை அழிக்கக் கூடியன. இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றிடமிருந்து தனனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இஸ்ரேலை இரும்புக் கூரையையும், David's Slingஐயும் உருவாக்கத் தூண்டியது. 04/07/2012 ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்தது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை.

 பல தட்டுப் பாதுகாப்பு முறைமை
இரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David's Sling நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது. தொலைதூர ஏவுகணைகளுக்கு எதிராக இஸ்ரேல் அம்பு முறைமை(Arrow systems)யை உருவாக்கிவருகிறது. இரும்புக் கூரை முறைமை ஏற்கனவே முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டது. மந்திரக்கோல் எனப்படும் David's Sling 2014-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும் என்கிறது இஸ்ரேல். அம்பு முறைமை - 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David's Sling விரைவாக வரும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.

2012 ஒக்டோபர் 23-ம் திகதி நள்ளிரவு சூடானிய நகர் கார்தோமில் இருந்த யார்மக் படைக்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சூடானிய ராடார்களை செயலிழக்கச் செய்து விட்டு நான்கு போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இச்செயலை இஸ்ரேல் மட்டும்தான் செய்திருக்க முடியும் என்கின்றனை சூடானியர்கள். இதைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது 79ஏவுகணைகளை ஏவியது. தொடர்ந்து ஹமாஸ் இயக்கப் படைத்தளபதியை இஸ்ரேல் கொலை செய்தது. தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஏவுகணைகளால் மோதிக் கொண்டன. சூடானில் இயங்கிய தொழிற்சாலை ஈரானிய உதவியுடன் படைக்கலன்களை ஹமாஸ் இயக்கத்திற்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் உற்பத்தி செய்ததாகக் கூறப்படுகிறது.  ஈரான் சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளூடாக ஹமாஸ் இயக்கத்திற்கு படைக்கலன்களை அனுப்பி வருகிறது. ஈரானிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் திரைமறைவுப் போரும் படைக்கலன் போட்டியும் தொடர்கிறது. ஈரானால் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் வரை ஏவுகணைகளால் தாக்கும் திறனைப் பெற்றுள்ளது.ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்பதையும் லிபியாவையும் தன்னுடன் இணைத்துச் செயற்படுகிறது. மும்மர் கடாஃபியின் வீழ்ச்சியின் பின்னர் லிபியாவின் பல படைக்கலன்கள் எகிப்தினூடாக ஹமாஸ் இயக்கத்தைச் சென்றடைந்துள்ளது. மல்லிகைப்புரட்சி ஹமாஸிற்கு சாதகமாக அமைந்து விட்டது என்று சொல்லாலாம்.

இஸ்ரேலின் தற்போதைய திட்டம் ஈரான்-சூடன்-ஹமாஸ்/ஹிஸ்புல்லா வழங்கற் பாதையை எப்படித் தகர்ப்பது என்பதே.

Sunday, 25 November 2012

விஞ்ஞான ஆய்வு: சைவ சாப்பாடு படுக்கை அறையில் பலமளிக்கும்

Hormones and Behavior என்னும் சஞ்சிகையில் சைவச் சாப்பாடு சாப்பிடுபவர்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக படுக்கை அறையில் இன்பம் அனுபவிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைவ சாப்பாட்டுக்காரர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 Michael Wasserman என்பவர் தலைமையில் பதினொரு மாதங்களாக குரங்குகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் Hormones and Behavior என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உகண்டாவில் உள்ள Kibale National Parkஇல் red colobus monkeys என்னும் குரங்கினங்களில்ஆய்வுகள் நடாத்தப்பட்டன. அக்குரங்குளின் சாப்பாட்டையும் அவற்றின் நாளாந்த நடவடிக்கை பாலியல் செயற்பாடுகள் போன்றவற்றை ஆய்வாளர்கள் பதிவு செய்தனர்.

சோயா அவரையில் உள்ள tofu மற்றும் பல காய்கறிகளில் உள்ள பதார்த்தங்கள் பாலியல் ஹோமோன்களை ஊக்குவிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. phytoestrogens எனப்படும் பாலியல் ஹோமோன்கள் காய்கறிவகைக்களில் நிறைய உள்ளன.

Wasserman இன் முடிபு: 'By altering hormone levels and social behaviors important to reproduction and health, plants may have played a large role in the evolution of primate, including human, biology in ways that have been under-appreciated.'
 

னிரிதும் மிருங்ளிதும் ரிணாளர்ச்சியிலும் ரோக்கித்திலும் இனப்பெருக்த்திலும் தாங்கள் கித்ங்கு குறைத்து திப்பிடப்பட்டுள்து. 

மெரிக்காவின் கென்ராக்கியில் உள் Bellarmine University இல் செய்ஆய்வுளில் மாமிம் உண்ணும் ஆண்கள் தாம் திஆண்மையுள்வர்கள் என்று நம்புகிறார்கள் என்று சொல்கிது.
 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...