Friday, 16 March 2012
தமிழினத்தின் போராட்டத்தின் முக்கிய அம்சமே புலிகளின் போராட்டம்
வெற்றிகள் என்றும் வெற்றிகளாவதில்லை
உண்மைகள் சிதைக்கப்படும் போது
வெற்றிகள் என்றும் நிலைப்பதில்லை
நீதி உதைக்கப்படும்போது
உண்மையும் நீதியும் கண்களாக
உழைப்பு எங்கள் கைகளாக
விடுதலைக்காக உழைத்தவர் நாம்
உண்மையும் நீதியும் விழுவதில்லை
நாமும் விழவில்லை
என்றும் நிமிர்ந்தே நிற்போம்
எதிரி ஜெனீவாவில் பயந்து நிற்கிறான்
நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.
புலிகளின் போராட்டத்தின்
ஓர் அம்சம் தமிழினமல்ல
தமிழினத்தின் போராட்டத்தின்
முக்கிய அம்சமே
புலிகளின் போராட்டம்
புலிகள் பதுங்கலாம்
புலிகள் மௌனிக்கலாம்
புலிகள் ஓய்வதில்லை
நாமும் ஓய்வதில்லை
எம் போராட்டம் தொடரும்
நேரங்கள் நீளலாம்
பாதைகள் தொலைவாகலாம்
உண்மையும் நீதியும் தொலைவதில்லை
எம் போராட்டம் விழவில்லை
நாமும் விழவில்லை
வடிவங்கள் வேறாக
மீண்டும் வீறு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

1 comment:
இது போதாது இன்னும் இன்னும் உலகத் தமிழனமே வீறு கொண்டெழ வேண்டும். சிங்கள கொலைவெறியரை சட்டத்தின் முன் கொண்டுவர போராட வேண்டும். உலகம் இனியாவது உணரட்டும் என்றும் இந்த கொலைவெறியருடன் தமிழனம் நிம்மதியாய் வாழ முடியதென்பதனை.
Post a comment