களத்தில் போராளிகளிடையும் காதல்
முகாம்களில் ஏதிலிகளிடையும் காதல்
புலத்தில் பெயர்ந்தவர்களிடையும் காதல்
ஆர்ப்பாட்டப் பேரணியிலும் காதல்
ஜெனிவா நோக்கிச் செல்கையிலும் காதல்
புறநானூற்றிலும் காதல் அகநானுற்றிலும் காதல்
காதலே இலக்கியம் காதலே இலட்சியம்
அன்றும் காதல் இன்றும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
காதலின்றி எதுவும் இல்லை
உருமாற்றத்தால் ஒரு கருவாய்
கருவறையில் ஒரு சிசுவாய்
என்னை ஈன்ற போதில்
அன்னை கொண்டாள் காதல்
தத்தி நடை பயில
கத்தி மொழி பேச
பெற்றோருடன் காதல்
உற்றோருடனும் காதல்
துள்ளித் திரிந்தோடி
பள்ளிக் கூடம் நாடி
நண்பர்கள் மீது காதல்
பல உணர்வுகளுடன் மோதல்
அரும்பும் மீசைப் பருவம்
கரும்பு போல் ஒரு உருவம்
ஓரவிழிப்பார்வை உசுப்பேற்றும்
இதயத்தை ரணகளமாக்கும்
அவள் நினைவுகள் எப்போதும்
ரவுண்டு கட்டி என்னைத் தாக்கும்
தெருவிலும் தொடரும்
ஆலயத்திலும் வழிபடும்
மெழுகு திரியொளியில்
மெருகூட்டும்
நடனத்தில் இணைந்து
உடல்கள் உரசும்
தினசரி மூன்று வேளை
சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும்
பார்க்க வேண்டும் போல்இருக்கும்
டுவிட்டரிலும் தொடரும்
sms பல பறக்கும்
முகவேட்டில் அரட்டை அடிக்கும்
உடலெங்கும் ஏதோ போல் இருக்கும்
உணவையும் வாய் மறுக்கும்
நினைவிலும் காதல் கனவிலும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
இதமான ஒரு வேதனை
அனுபவித்தவனுக்கே இது புரியும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

No comments:
Post a comment