Saturday, 26 February 2011

நகைச்சுவைக் கதை: சீனாவிற்கு தண்ணீர் வார்த்த இந்தியன்.


மத்திய கிழக்கு நாடொன்றில் ஓர் சிங்களவன் ஒரு சீனன் ஒர் இந்தியன் ஆகிய மூன்று பேரும் ஒற்றுமையாக ஒர் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். மூவரும் ஓர் இரவு ஒரு பாலைவனத்தினூடாக சென்று கொண்டிருக்கையில் ஒரு கல்லில் இடறுபட்டு விழுந்தனர். இலங்கையனுக்கு கோபம் வந்து அந்தக் கல்லை உதை உதை என்று உதைத்தான். அவனோடு சேர்ந்து மற்ற இருவரும் கல்லை உதைக்க கல்லுப் பிரண்டது. என்ன ஆச்சரியம் கல்லுக்குக் கீழிருந்து ஒரு பூதம் புறப்பட்டது. அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தது விட்டு அன்பர்களே என்னை பல்லாயிரம் ஆண்டுச் சிறையிலிருந்து மீட்டுவிட்டீர்கள். உங்களுக்குத் தேவையானவற்றைக் கேளுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன் என்றது.

சீனாக் காரன் முந்தி விழுந்து எனது நாட்டை நாம் அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்து பாது காக்க வேண்டும். நாம் எமது நாட்டைப் பாதுகாக்க சுவர்தான் கட்டுவோம். உடனடியாக நூறு மீட்டர் உயரம் பதினைந்து மீட்டர் அகலத்தில் எமது நாட்டைச் சுற்றி ஒரு பெரும் சுவர் எழுப்பிவிடு என்றது. பூதம் ஒரு சொடுக்கில் சீனாவைச் சுற்றி பெரும் சுவைரை எழுப்பிவிட்டது.

இப்பொது இந்தியன் அட சீனன் எப்பவும் எங்களை முந்துகிறான், இவனுக்கு வைக்கிறன் ஆப்பு என்று நினைத்துக் கொண்டு பூதத்திடம் சொன்னான் நீ எனக்குச் செய்ய வேண்டியது இலகுவான வேலை. சீனாவில் கட்டிய சுவருக்குள் நீரை வார்த்து நூறு மீட்டர் உயரத்தையும் நிரப்பிவிடு என்றான். பூதம் ஒரு சொடுக்கில் அப்படியே செய்தது. இப்போது சீனன் ஆ... ஊ... என்று கத்திக் கொண்டு இந்தியன் மேல் குங்பூ பாய்ச்சல் பாய இந்தியன் கபடி..... கபடி.. என்று உறுமிக்கொண்டு சீனன் மேல் பாய்ந்து இருவரும் சண்டையிட்டனர்.

இப்போது பூதம் யோசித்துக் கொண்டிருந்த சிங்களவனைப் பார்த்து. சரி உனக்கு என்ன வேண்டும் என்றது. சிங்களவன் தனது காதலி குமாரிஹாமியை கன்னியாக உடனடியாக என்முன் கொண்டு வந்து நிறுத்து என்றான். பூதம் கண்ணை மூடிச் சிறிது நேரம் யோசித்தது. சிங்களவனின் காதலி சிங்களவனை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழி அனுப்பி விட்டு வீடு திரும்பும் வழியிலேயே அவளது வாகன ஓட்டியை டாவடித்து தன்னை இழந்துவிட்டாள். அவன் கேட்டபடி செய்ய முடியாது என்று உணர்ந்த பூதம். இந்தா பார் அவங்க ரெண்டு பேரும் தங்கள் நாட்டுக்காக கேட்டார்கள். உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றது. உடனே சிங்களவன் சரி நானும் எனது நாட்டுக்காகவே கேட்கிறேன். எங்கள் புண்ணிய பூமியில் சகல மக்களும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அமைதியாக நல்ல தலைமையின் கீழ் வாழவேண்டும் என்று கேட்டான். இந்தப்பாவி பார்த்திபனின் அப்பனுக்குப் பிறந்திருப்பானோ; இப்படிக் குண்டக்க மண்டக்கமாகவே கேட்கிறானே; நடக்கிறமாதிரி ஏதாவது கேட்கிறானா? படுபாவி! படுபாவி!! என்று பூதம் தனக்குள் நினைத்துக் கொண்டது. பின்னர் சிங்களவனைப் பார்த்துச் சொன்னது: நான் சும்மா பகிடிக்குச் சொன்னேன். உனது காதலியைக் கன்னியாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன் என்றது.

5 comments:

Anonymous said...

மிகவும் வேதனையாக உள்ளது........ சிங்களனே சிங்கள பெண்ணை அவமானபடுத்தி இருப்பது

Anonymous said...

அட இறந்த பிணத்தையே புணருபவன் இந்த அசிங்க சிங்களவன். அப்படியிருக்க உயிருள்ளதையா விட்டு வைப்பான்?

Anonymous said...

அட இறந்த பிணத்தையே புணருபவன் இந்த அசிங்க சிங்களவன். அப்படியிருக்க உயிருள்ளதையா விட்டு வைப்பான்?

YOGA.S.Fr said...

சாரி,கொஞ்சம் லேட்டாயிடிச்சு! சிந்தனையைத் தூண்டும் பதிவு!ஒவ்வோர் எழுத்தும் அச்சொட்டாக அப்படியே. (புரிகிறதா?)தொடருங்கள்!வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

சிங்களன் மாறி போனான்,சிங்கள பெண்களுமா மாறி போனார்கள்....
பெண்குலத்துக்கு அசிங்கம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...